Wikipedia 2006 (Static HTML - No images) is on line here! [.7z dumps also available]
Sorry, English version is not working. Please, connect the ஆஸ்திரேலியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆஸ்திரேலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆஸ்திரேலியா
Australian Government
ஆஸ்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியாவின் சின்னம்
நாட்டுப்பண்
Advance Australia Fair1
Location of ஆஸ்திரேலியாவின்
தலைநகரம் கன்பரா
35°18′S 149°08′E / -35.3, 149.133
பெரிய நகரம் சிட்னி
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்2
மக்கள் ஆஸ்திரேலியன்
அரசு நாடாளுமன்ற ஜனநாயகம்
(அரசியலமைப்பு முடியாட்சி)
 -  முடியாட்சி எலிசபெத் II
 -  ஆளுநர் மைக்கல் ஜெஃப்ரி
 -  பிரதமர் ஜோன் ஹவார்ட்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  அரசியலமைப்பு ஜனவரி 1, 1901 
 -  வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் டிசம்பர் 11, 1931 (செப் 9, 1939 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது) 
 -  ஆஸ்திரேலிய சட்டம் மார்ச் 3, 1986 
பரப்பளவு
 -  மொத்தம் 7,741,220 கிமீ² (6வது)
2,988,888 சது. மை 
 -  நீர் (%) 1
மக்கள்தொகை
 -  2007 estimate 21,134,563 [1] (53வது)
 -  2006 census 19,855,288 
 -  அடர்த்தி 2.6/km² (224வது)
6.7/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2007 கணிப்பீடு
 -  மொத்தம் US$718.4 பில்லியன் (17வது)
 -  தலா/ஆள்வீதம் US$34,359 (14வது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 மதிப்பீடு
 -  மொத்தம்l US$822.1 பில்லியன் (15வது)
 -  தலா/ஆள்வீதம் US$39,320 (17வது)
ம.வ.சு (2004) 0.957 (உயர்) (3வது)
நாணயம் டொலர் (AUD)
நேர வலயம் ஆஸ்திரேலிய நேரம் (ஒ.ச.நே.+8 to +10.53)
 -  கோடை (ப.சே.நே.) ஆஸ்திரேலிய நேரம் (UTC+9 to +11.53)
இணைய குறி .au
தொலைபேசி +61
1அரசியின் குடும்பத்தினரின் வருகையின் போது முடியாட்சி கீதம் ("அரசியை கடவுள் காக்க") பாடப்படுகிறது([1])
2ஆங்கிலத்துக்கு சட்ட அடிப்படையில் ("டெ ஜூரி", de jure) உரிமைநிலை ஏதும் இல்லை ([2])
3மூன்று நேர வலயங்களுக்கும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பார்க்க: ஆஸ்திரேலிய நேர வலயம்

திமோர்
கடல்
கார்பெண்டாரியா
வளைகுடா
அரபூரா கடல்
பெரும்
ஆஸ்திரேலிய
பைற்
தாஸ்மான்
கடல்
கோரல்
கடல்
தெற்கு
பசிபிக்
கடல்
தெற்குப் பெருங்கடல்
Great
Barrier
Reef

ஆஸ்திரேலியா நாடு, ஆஸ்திரேலிய கண்டம், மற்றும் சில தீவுகளையும் உள்ளடக்கியது. பொதுநலவாய அவுஸ்திரேலியா என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் இந்நாடு தமிழில் அவுஸ்திரேலியா எனவும் அழைக்கப்படுகின்றது. எந்த நாட்டுடனும் நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா, நியூசிலாந்து ஆகியன இதன் அயல் நாடுகளாகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடு. ஆனால் மக்கள்தொகை வெறும் 20 மில்லியன் (2 கோடி). மேற்கத்திய பொருளாதாரமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈட்டுபடிகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.

பொருளடக்கம்

[தொகு] ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள்

அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும்.

மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை மத்திய அரசாங்கம் (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே மத்திய அரசாங்கம் மாற்ற முடியும். மருத்துவசாலைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

[தொகு] ஆஸ்திரேலியாவின் வரலாறு

[தொகு] ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்

முதன்மைக் கட்டுரை: ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்

இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் (Australian Aborigines) இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் வேறு ஒரு ஆய்வு 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி மனிதன் இருத்திருக்கிறான் எனக் கூறுகிறது. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்தோ தென் இந்தியாவிலிருந்தோ மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.

[தொகு] ஆங்கிலேயர்கள் வரவு

(குற்றவாளிகளைத் தள்ளிவைக்க விடப்பட்ட நிலமாக முன்பு இருந்தது)

[தொகு] ஆஸ்திரேலியாவின் நிலவியல் அமைப்புகள்

[தொகு] இட அமைவு

[தொகு] இயற்கையமைப்பு

[தொகு] தட்ப வெப்ப நிலை

ஆஸ்திரேலியா தட்ப வெட்ப நிலை
ஆஸ்திரேலியா தட்ப வெட்ப நிலை

[தொகு] ஆஸ்திரேலியாவின் இன்றைய வாழ்வும் பொருளாதாரமும்

[தொகு] ஆஸ்திரேலியாவின் செடிகொடிகளும் உயிரினங்களும்

இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்.

கோவாலா மரத்தில் ஏறுதல்
கோவாலா மரத்தில் ஏறுதல்

ஏனைய மொழிகள்