சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனைக்கோட்டை, இளவாலை, மானிப்பாய், மாரீசன்கூடல், மாசியப்பிட்டி, மாதகல், முள்ளானை, நவாலி, பண்டத்தரிப்பு, பெரியவிளான், பிரான்பத்தை, சண்டிலிப்பாய், சாவற்காடு, சில்லாலை, சுதுமலை, உயரப்புலம், வடலியடைப்பு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்குத் தெற்காகக் குடாநாட்டின் வடக்கு, தெற்கு எல்லைகளைத் தொட்டு நிற்கின்ற இப்பிரிவின் வடக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன. கிழக்கில் தெல்லிப்பழை, உடுவில், நல்லூர் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், மேற்கில் சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் சண்டிலிப்பாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இப் பிரிவின் பரப்பளவு 45 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].
[தொகு] குறிப்புக்கள்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளியிணைப்புக்கள்
யாழ்ப்பாண மாவட்டம் பிரதேசச் செயலாளர் பிரிவுகள் |
---|
ஊர்காவற்றுறை | சங்கானை | சண்டிலிப்பாய் | தெல்லிப்பழை | உடுவில் | கோப்பாய் | கரவெட்டி | மருதங்கேணி | பருத்தித்துறை | சாவகச்சேரி | நல்லூர் | யாழ்ப்பாணம் | வேலணை | நெடுந்தீவு
|