Wikipedia 2006 (Static HTML - No images) is on line here! [.7z dumps also available]
Sorry, English version is not working. Please, connect the சிட்னி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சிட்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிட்னி
{{{நகரப்பெயரின்}}} அமைவிடம்
அமைவிடம் 33°52′ S
151°12′ E
மாநிலம் நியூ சவுத் வேல்ஸ்
பரப்பு 12 144.6 கிமீ²
நேர வலயம்

 • கோடைகாலம் 

AEST (UTC+10)

AEDT (UTC+11)

மக்கள் தொகை
 • 2003 கணக்கெடுப்பு
 • அடர்த்தி

4,198,543 (1வது)
345.7/கிமீ²

சிட்னி (Sydney) அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப்ஸ் என்பவர் சிட்னி நகரத்தை ஸ்தாபித்தார்.

[தொகு] சிட்னி 2000

2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ், நகரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நகரின் போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு எல்லாமே கிட்டதட்ட புதிதாய் அமைக்கப்பட்டது. ஏராளமான புதிய ஹோட்டல்கள், அபார்ட்மெண்ட்கள் நகரின் அழகையும் இயல்பையும் கெடுத்து விட்டது என்பது உள்ளூர்வாசிகளின் புகார். ஆம், நான்கு கோடி மக்கள் வாழும், பிரபலமான வர்த்தக நகராக இருந்தாலும், கவர்ச்சிகரமான, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு நகர இயல்பு இங்கு உண்டு.

[தொகு] சிட்னியின் சிறப்பு இடங்கள்

போர்ட் ஜாக்ஸன் எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுக பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் ஓபரா ஹவுஸ் ஆகியன உலகம் முழுவது அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கைத் துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுகக் கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இது போதாதென்று பாரமட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் (டிசம்பர் - ஜனவரி) சிட்னியின் கடற்கரை நிரம்பி வழியும்.

சிட்னி ஓபரா மாளிகை
சிட்னி ஓபரா மாளிகை

நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி. நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் நகர மண்டபம் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம். ஹைட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய அரும்பொருட் காட்சியகம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது.

ஓபரா ஹவுஸ் அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் காணலாம்.

நகரிலிருந்து சிறிது நேரப் படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்ப் பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

[தொகு] வெளி இணைப்புகள்