Wikipedia 2006 (Static HTML - No images) is on line here! [.7z dumps also available]
Sorry, English version is not working. Please, connect the பாரிஸ் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பாரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உதயத்தில் ஈபெல் கோபுரம்
உதயத்தில் ஈபெல் கோபுரம்

பாரிஸ் பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும். அந் நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலது கரை வடக்கிலும், சிறிய இடது கரை தெற்கிலும் உள்ளது. இந்த ஆறு, அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது. சம்ஸ் எலிசீஸ் (Champs-Élysées) போன்ற மரவரிசைகளோடு கூடிய "புலேவாட்"டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது.

இந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது (1999 கணக்கெடுப்பு: 2,147,857). பிரெஞ்சு மொழியில் aire urbaine de Paris என வழங்கப்படும் பாரிஸின் பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 கோடி மக்கள் (1999 கணக்கெடுப்பு: 11,174,743) வசிக்கிறார்கள்.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

(முழுமையான விவரங்களுக்குப் பாரிஸின் வரலாறு கட்டுரையைப் பார்க்கவும்)

பாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த "கலிக்" இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.

வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் (Palais de Justice) மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாரிஸின் கொடி
பாரிஸின் கொடி

கி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை "சதுப்பு இடம்" எனப் பொருள்படும் லூட்டேசியா எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது லத்தீன் பகுதி என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் "பாரிஸ்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற Viking ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் படிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.

11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180-1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டு|13ஆம்]] நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் (Sun King) என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643 - 1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வேர்செயில்ஸுக்கு மாற்றப்பட்டது.

வெற்றி வளைவு
வெற்றி வளைவு

[தொகு] புறநகர் மற்றும் பாரிஸ் பெரு நகரப் பிரதேசங்களில்(Île-de-France)

 • வணிகப் பகுதிகள்
  • La Défense - மேற்குப் பாரிஸிலுள்ள முக்கியமான அலுவலக, அரங்க மற்றும் கொள்வனவுத் தொகுதி
 • கேளிக்கைப் பூங்காக்கள்
  • டிஸ்னிலாண்ட் Resort பாரிஸ் - பாரிஸின் கிழக்கேயுள்ள, Marne-la-Vallée யின் புற நகர்ப் பகுதியிலுள்ளது
  • Parc Astérix, பாரிஸின் வடக்கில்
 • நினைவுச் சின்னங்கள்
  • Grande Arche de la Défense
  • வேர்செயில்ஸ் அரண்மனை - பாரிஸின் வட கிழக்கிலுள்ள வேர்செயில்ஸ் நகரில் அமைந்துள்ள லூயிஸ் XIV இனதும் பின் வந்த அரசர்களினதும் அரச மாளிகைகள். பிரான்ஸின் அதிக சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடம்.
  • Vaux-le-Vicomte, மெலுனுக்கு அண்மையிலுள்ள சிறிய அரச மாளிகை. இதனைப் பின்பற்றியே வேர்செயில்ஸ் மாளிகைகள் வடிவமைக்கப்படன.
  • செயிண்ட் டெனிஸ் பசிலிக்கா - பண்டைய கொதிக் தேவாலயம் மற்றும் பல பேரரசர்களின் புதைகுழிகள், நகரின் வடக்கிலுள்ளது.

[தொகு] நிகழ்ச்சிகள்

நொட்ரே டேமின் காட்சி மண்டபத்திலிருந்து பாரிஸ் நகரக் காட்சி
நொட்ரே டேமின் காட்சி மண்டபத்திலிருந்து பாரிஸ் நகரக் காட்சி
 • 52 BC - பின்னர் பாரிஸான லூதேசியா, கல்லோ-ரோமரினால் கட்டப்பட்டது
 • 1113 - பியரே அபிலார்ட் தன்னுடைய பாடசாலையை ஆரம்பித்தார்
 • 1163 - நொட்ரே டேமின் கட்டிட வேலைகள் ஆரம்பம்
 • 1257 - Sorbonne பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது
 • 1682 - லூயிஸ் XIV moves the French court from the Tuileries palace to Versailles
 • July, 1789 - Storming of the Bastille
  • அரச குடும்பம் வேர்செயில்சிலிருந்து பாரிசுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டது.
 • 1814 - நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் [[ஆறாவது கூட்டணி]ப் படைகள் பாரிஸை ஆக்கிரமித்தன.
 • 1815 - நூறு நாட்கள் முடிவுக்குப் பின்னர் பாரிஸ் மீண்டும் ஏழாவது கூட்டணிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
 • 1840 - நெப்போலியனின் உடல் Les Invalides இல் அடக்கம் செய்யப்பட்டது.
 • 1853 - Baron Haussmann பாரிஸின் மையப் பகுதியை மீளமைத்தார்
 • 1855 - Exposition Universelle (1855)
 • 1856 - பாரிஸ் மகாநாடு கூட்டப்பட்டது

லாண்ட்சட் 7இலிருந்து எடுக்கப்பட்ட, பாரிஸின் இன்னொரு simulated-நிற செய்மதிப் படிமம். இது பாரிஸ் நகர மத்திய பகுதியைப் பெருப்பித்துக் காட்டுகிறது

[தொகு] வெளியிணைப்புகள்


உலகத்தமிழர் வாழ் நகரங்கள்|
சென்னை | மதுரை | பெங்களூர் | யாழ்ப்பாணம் |கொழும்பு | ரொறன்ரோ | சிங்கப்பூர் | கோலாலம்பூர் | லா சப்பல் - பாரிஸ் | இலண்டன்

ஏனைய மொழிகள்